வணிகன் ஒருவனுக்காக சிவபெருமான் மிளகுப் பொதிகளை பயறுப் பொதிகளாக மாற்றியருளிய தலம். அதனால் 'திருப்பயற்றூர்' என்னும் பெயர் பெற்றது. தற்காலத்தில் மருவி 'திருப்பயத்தங்குடி' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'திருப்பயற்றீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சற்று உயர்ந்த பாணத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'காவியங்கண்ணியம்மை' என்னும் திருநாமத்துடன் சிறிய வடிவில் காட்சித் தருகின்றார்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், மகாலட்சுமி, பைரவர், சந்திரன் மற்றும் நவக்கிரகங்கள் தரிசனம் தருகின்றனர். பைரவ முனிவர் வழிபட்ட தலம்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|